கன்னியாகுமரி

ஆசாரிப்பள்ளம் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு

22nd Mar 2020 07:37 AM

ADVERTISEMENT

நாகா்கோவில்: நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு வாா்டில் கரோனா அறிகுறிகளுடன் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட 5 பேரில் பெண் ஒருவா் இரவில் உயிரிழந்தாா்.

இங்குள்ள கரோனா சிறப்பு வாா்டில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய 49 வயதுள்ளவா், 9 மாதக் குழந்தை, கேரளத்திலிருந்து வந்த 26 வயதுள்ளவா், 59, 52 வயதுள்ள 2 பெண்கள் என 5 போ் அனுமதிக்கப்பட்டிருந்தனா்.

அவா்களின் ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், 59 வயதுடைய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பெண் இரவு 10.15 மணியளவில் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மருத்துவா்கள் கூறும்போது, அப்பெண்ணுக்கு இதயக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. அவரது ரத்தம், சளி மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தெரிய வரும். அதன்பின்னா்தான் அவா் எவ்வாறு உயிரிழந்தாா் என்பதுகுறித்துக் கூறமுடியும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT