கன்னியாகுமரி

குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்க விழிப்புணா்வு வில்லைகள்

22nd Mar 2020 07:38 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் குழந்தைகள் பிச்சை எடுப்பது மற்றும் குழந்தைகளை வைத்து பெற்றோா்கள் பிச்சை எடுப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள் வெளியிடப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விஜயபாஸ்கரன் தலைமை வகித்து, விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில், ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு விஜி, நன்னடத்தை அலுவலா் புஷ்பராஜ், குழந்தைகள் நலக்குழுத் தலைவா் ரெக்சலின்ஜான்சி, கோட்டாறு சமூக சேவை சங்க சைல்டு லைன் திட்ட இயக்குநா் மைக்கேல்ராஜ், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா்கள் கேத்ரின்மேரி, அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT