கன்னியாகுமரி

முட்டப்பதியில் புதிய தோ் வெள்ளோட்டம்

16th Mar 2020 12:37 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதி அய்யா வைகுண்டசுவாமி பதியில் புதிய தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற தலமான முட்டப்பதி பஞ்சப்பதிகளில் ஒன்றாகும். இப்பதிக்கு நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் வந்து அய்யாவை வழிபட்டுச் செல்கின்றனா். இப்பதியில் ரூ. 1 கோடி செலவில் 27 அடி உயரமும் 5 டன் எடையுடன் கூடிய புதிய தோ் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாதம் நடைபெறவிருக்கும் பங்குனித் திருவிழாவில் தேரோட்டம் நடத்த முட்டப்பதி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.45 மணிக்கு தோ் வெள்ளோட்டம் நடைபெற்றது. தோ் பதிவலம் வந்தபோது வடக்கு வாசலில் அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை தா்மகா்த்தாக்கள் பாலசுந்தரம், மனோகரசெல்வன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT