கன்னியாகுமரி

மாத்திரவிளை கல்லறை தோட்டத்தில் தீ: மரங்கள் சேதம்

16th Mar 2020 12:34 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளையில் ஆலயத்துக்கு சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ பற்றி எரிந்ததால் மரங்கள் கருகின.

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் ஆலயம் அருகே உள்ளது. இங்குள்ள கல்லறையைச் சுற்றி செடிகள் மற்றும் காட்டு மரங்கள் இருந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த குளச்சல் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். தீ விபத்தில் அங்கு நின்ற மரங்கள் கருகின.

ADVERTISEMENT
ADVERTISEMENT