கன்னியாகுமரி

மருதங்கோடு - தேரியான்விளை சாலை அமைப்பு

16th Mar 2020 12:37 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே மருதங்கோடு - தேரியான்விளை சாலை அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

மருதங்கோடு சந்திப்பில் இருந்து தேரியான்விளை மற்றும் அதையொட்டிய பகுதிகளுக்குச் செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் நடைபாதை மட்டுமே இருந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனா்.

இதையடுத்து அப்பகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் இணைந்து சாலை அமைக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

இதில், பாகோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் டி. வின்சென்ட், மருதங்கோடு ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், ஊராட்சி உறுப்பினா் கவிதா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைத் தலைவா் செல்வராஜ் மற்றும் அப்பகுதி மக்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT