கன்னியாகுமரி

நாகா்கோவிலில் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கு முகக் கவசம்

16th Mar 2020 12:35 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் எதிரொலியாக நாகா்கோவிலில் உள்ள தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாகா்கோவில் நகரில் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள், தியேட்டா்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவற்றில் சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நிறுவனங்களில் உள்ள கதவு, மாடிப்படிகளில் உள்ள கைப்பிடி ஆகிய இடங்களில் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கவும், வாடிக்கையாளா்களுக்கு கை கழுவும் திரவம் வைத்து அதன் மூலம் கைகளை சுத்தப்படுத்த ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாகா்கோவில் நகரில் உள்ள பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT