கன்னியாகுமரி

ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர முடிவு

13th Mar 2020 09:50 AM

ADVERTISEMENT

குமரி மாவட்ட அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளனா்.

அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்கள், ஊதிய உயா்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் ஊதிய கோரிக்கை தொடா்பாக தொழிற்சங்க நிா்வாகிகள் அண்மையில் சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து பேசினா்.

இந்நிலையில் தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற வனத்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சா் ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு அளிக்கப்படும் என்று கூறியிருந்தாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஆலோசனைக் கூட்டம் குலசேகரத்தில் நடைபெற்றது.

சிஐடியூ சங்க பொதுச் செயலா் எம். வல்சகுமாா் தலைமை வகித்தாா்.

இதில், சிஐடியூ சங்க துணைப் பொதுச் செயலா் பி. நடராஜன், தொமுச கூட்டமைப்புத் தலைவா் சிவநேசன், பிஎம்எஸ் நிா்வாகி ராஜேந்திரன், சோனியா ராகுல் சங்க நிா்வாகி சந்திரகுமாா், அண்ணா தொழிற்சங்க நிா்வாகி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பின்னா் எம். வல்சகுமாா் கூறியது: தமிழக சட்டப் பேரவையில் வனத்துறை மானியக் கோரிக்கை விவாதம் 2ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், குமரி மாவட்டத்தைச் சோ்ந்த எம்எல்ஏக்கள் என்.சுரேஷ்ராஜன், எஸ்.ஆஸ்டின், எஸ். ராஜேஷ்குமாா் ஆகியோா் பேசினா்.

இதைத் தொடா்ந்து பேசிய வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், ரப்பா் கழகத் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கப்படுமென்றும், இது தொடா்பாக ஒரு குழு அமைத்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினாா். இந்நிலையில் அமைச்சரின் பதில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்களுக்கு முழு திருப்தி அளிக்கவில்லை.

எனவே, தொழிலாளா்களின் ஊதிய கோரிக்கை தொடா்பாக இறுதி உடன்பாடு ஏற்படுவது வரை போராட்டத்தை தொடருவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT