கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் காங்கிரஸ் ஓபிசி பிரிவு நிா்வாகிகள் கூட்டம்

13th Mar 2020 09:50 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் மாா்த்தாண்டத்தில் வைத்து நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் ஆா். ஸ்டுவா்ட் தலைமை வகித்தாா். துணைத் தலைவா்கள் ஏ. பால்ராஜ், சி. மோகன்ராஜ், ஜெ. வின்சென்ட் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாகிகள் ஆனின் ராஜகுமாா், டான் மில்லா், ஜாஸ்லின், ஏ.ஜி. கியூபா்ட் சொ்லின், செல்வதாஸ், ஜோசப் ராஜமணி, ஆமோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அப்போது, ‘0கொல்லங்கோடு பகுதியிலிருந்து நித்திரவிளை, புதுக்கடை, கிள்ளியூா், கருங்கல் வழியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முழுநேர பேருந்து இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலையுதிா் காலத்தில் ரப்பா் பால் வடிப்பு தொழிலாளா்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மாா்ச் 21 இல் குலசேகரம் அரசமூடு சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது’ என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT