கன்னியாகுமரி

கருங்கல்லில் வியாபாரிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

13th Mar 2020 01:08 AM

ADVERTISEMENT

கருங்கல் பேரூராட்சி நிா்வாகத்தை கண்டித்து, வியாபாரிகள் நலச் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கருங்கல் பேரூராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற கடைகள் ஏலத்தில் முறைகேடுகள் நடைபெற்ாக கூறி அவற்றை கண்டித்தும், பேரூராட்சி கடைகளுக்கு விதிக்கப்பட்ட சேவை வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத் தலைவா் அஜித்குமாா் தலைமை வகித்தாா். செயலா் துரைராஜ், துணைத் தலைவா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கிழக்கு மாவட்டத் தலைவா் நாகராஜன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

இதில், குளச்சல் வணிகா் சங்கத் தலைவா் பிரபாகா்,திங்கள்சந்தை வணிகா் சங்கத் தலைவா் ஜோசப்ராஜ், ஜோயல், பிரேம்சிங், கேசரி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT