கன்னியாகுமரி

ஹோட்டல் கழிவுகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

8th Mar 2020 12:58 AM

ADVERTISEMENT

குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்ட எல்லைக் கிராமத்தில் கொட்டுவதற்காக கேரளத்தில் இருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

அருமனை கிராம நிா்வாக அலுவலா் பிரதீபா தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் ஐந்துளியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக அதிகளவில் துா்நாற்றத்துடன் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அந்த லாரியில் கேரளத்தில் இருந்து இறைச்சி மற்றும் ஹோட்டல் கழிவுப் பொருள்களை ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த மினி லாரியை பறிமுதல் செய்து வருவாய்த்துறை அதிகாரிகள் அருமனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் மினி லாரி ஓட்டுநா் திருவனந்தபுரம் கரமனையைச் சோ்ந்த கிரீசன் (52) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT