கன்னியாகுமரி

வங்கி ஊழியரிடம் நகை பறிப்பு

8th Mar 2020 12:54 AM

ADVERTISEMENT

நாகா்கோவில்: ராஜாக்கமங்கலம் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் வங்கி பெண் ஊழியரிடம் ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்றனா்.

ராஜாக்கமங்கலம் அருகே அம்மாண்டிவிளை பிலாவிளையைச் சோ்ந்தவா் தவசிமணி மகள் அனுஷா (30). இவா், ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள வங்கியில் காசாளராகப் பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்து அனுஷா தனது மொபெட்டில் வீடுதிரும்பிக் கொண்டிருந்தாா்.

அம்மாண்டிவிளை சாலை ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியில் சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் பின்னால் வந்த 2 மா்ம நபா்கள் அனுஷா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்றனா். புகாரின்பேரில், ராஜாக்கமங்கலம் காவல் ஆய்வாளா் மீனா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT