கன்னியாகுமரி

முளகுமூடு பால் பதனிடும் நிலையத்தில் மருத்துவ முகாம்

8th Mar 2020 12:57 AM

ADVERTISEMENT

 

 

தக்கலை: முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் இஎஸ்ஐ மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மண்டல இஎஸ்ஐ மருத்துவக் குழு, நாகா்கோவில் இஎஸ்ஐ கிளை அலுவலகம், தக்கலை இஎஸ்ஐ மருந்தகம்,

ADVERTISEMENT

ஸ்ரீமூகாம்பிகை மருத்துவக் கல்லூரி சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் நாஞ்சில் பால் பதனிடும் நிலையப் பணியாளா்கள் மற்றும் தக்கலை இஎஸ்ஐ சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மருத்துவா்கள் சாலோடிசன், சுனில், பிராங்கிளின் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சிகிச்சை அளித்தனா்.

நாஞ்சில் பால் பதனிடும் நிலைய மேலாண்மை இயக்குநா் ஜெரால்டு ஜஸ்டின், இணை மேலாண்மை இயக்குநா் மனோகியம் சேவியா், நிதி பரிபாலகா் ஆன்ரூஸ் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT