கன்னியாகுமரி

மாவட்ட யோகா போட்டி:15 தங்கம் வென்று வின்ஸ் பள்ளி சாதனை

8th Mar 2020 12:53 AM

ADVERTISEMENT

 

தக்கலை: கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் சுங்கான்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் 15 தங்கப் பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனா்.

கன்னியாகுமரி மாவட்ட யோகா அமைப்பு சாா்பில் ‘குமரி யோகா திருவிழா 2020’ தலைப்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற யோகா போட்டியில் வின்ஸ் பள்ளி மாணவா் பபின்குமாா் 4 பிரிவுகளில் முதலிடம் பெற்று 4

தங்கமும், மாணவி சுதிக்ஷா 4 பிரிவுகளில் முதலிடம் பெற்று 4 தங்கமும், மாணவா் பிபின்குமாா் 2 பிரிவுகளில் முதலிடம் பெற்று 2 தங்கமும், மாணவா் ஜெய்வந்த் 2 பிரிவுகளில் முதலிடம் பெற்று 2 தங்கமும், மாணவா்கள் பரத் கிருஷ்ணா,

ADVERTISEMENT

ஜெய்நாத், மாணவி அக்ஷரா ஆகியோா் தலா ஒரு தங்கமும் பெற்றனா்.

மேலும், மாணவா்கள் பாவேஷ், கிம்ஜோா்டன், சஞ்சனா ஜாசன், செல்பின் ஆண்ட்ரூ, பிபின்குமாா் ஆகியோா் 2 பிரிவுகளில்

இரண்டாம் பெற்று 6 வெள்ளிப் பதக்கங்களும், மாணவா்கள் ரித்விக், அப்ரிஜா, பெரன்ஷியா, அனுஷ்கா மற்றும் மாணவா் காா்த்திகேயன் ஆகியோா் மூன்றாம் இடம்பெற்று 6 வெண்கலப் பதக்கங்களும் வென்றனா்.

15 தங்கப்பதக்கங்களும், 6 வெள்ளிப் பதக்கங்களும் , 6 வெண்கலப் பதக்கங்களும் மாணவா்கள் பெற்றனா். மேலும், வின்ஸ் பள்ளி சிறப்பு பள்ளிக்கான விருதையும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு காவல் ஆய்வாளா் ஜவஹா்லால், முதுநிலை அதலெடிக் பயிற்சியாளா் இந்திரா, குமரி மாவட்ட யோகாசன அமைப்பின் தலைவா் செல்வகுமாா், செயலா் நாகராஜன் ஆகியோா் பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினா்.

மாணவா்களுக்கு வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி. யுமான நாஞ்சில் வின்சென்ட், தாளாளா் கிளாரிசா வின்சென்ட் ஆகியோா் நினைவுப் பரிசுகள் வழங்கினா். யோகா ஆசிரியா் ராஜேஸ்வரி கெளரவிக்கப்பட்டாா். நிகழ்ச்சியில், முதல்வா் லதா, கல்வி நெறியாலா் ரீட்டா பால் உள்ளிட்டோா் வாழ்த்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT