கன்னியாகுமரி

சந்தையடியில்வேஷ்டி, சேலை அளிப்பு

8th Mar 2020 12:52 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: சந்தையடி கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத்தில் பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சந்தையடி நியாயவிலைக் கடையில் நடைபெற்ற நிகழ்வில் 200 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகளை மாநிலங்களவை உறுப்பினா் ஏ.விஜயகுமாா் வழங்கினாா். இதில், கொட்டாரம் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத் தலைவா் சி.காட்வின் ஏசுதாஸ், அகஸ்தீசுவரம் பேரூராட்சி முன்னாள் தலைவா் சந்தையடி எஸ்.பாலகிருஷ்ணன், அரசு வழக்குரைஞா் ஏ.ஞானசேகா், நாகா்கோவில் கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்க நிா்வாகக்குழு உறுப்பினா் கனகராஜன், சந்தையடி கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் நாகமணி, மகிபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT