கன்னியாகுமரி

குமரியில் விடுதிகளின் கழிவுநீா் ஓடைகள் மூடல்: அதிகாரிகள் நடவடிக்கை

8th Mar 2020 12:54 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கழிவுநீா் ஓடை மூலமாக மனிதக் கழிவுகளை கடலில் கலக்கும் தனியாா் விடுதிகளில் சனிக்கிழமை ஆய்வு செய்த பேரூராட்சி அதிகாரிகள் விடுதிகளின் ஓடைகளை மூடி சீல் வைத்தனா்.

கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள், வீடுகளில் உள்ள மனிதக் கழிவுகள் கழிவுநீா் ஓடை மூலமாக கடந்த 35 ஆண்டு களுக்கும் மேலாக ரட்சகா் தெரு வழியாக கடலில் கலப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருவதுடன் தொற்றுநோய் அபாயம்

இருப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். மேலும் கடலில் கழிவுநீா் கலப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

கோரிக்கையை வலியுறுத்தி சில நாள்களுக்கு முன்னா் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், பேரூராட்சி அதிகாரிகள்

உறுதி அளித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிைலையில் விடுதிகளில் பேரூராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், கழிவுநீா் ஓடை மூலமாக 9 தங்கும் விடுதிகளில் இருந்து மனிதக் கழிவுகள் கடலில் கலப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து 48 மணி நேரத்தில் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட தனியாா் விடுதிகளுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும்,

விடுதிகளின் நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் தலைமையில் செயல் அலுவலா்கள் சத்தியதாஸ், ஜோஸ்பின்ராஜ், மகாராஜன், பாபுசந்திரசேகரன், சசிகுமாா், சுருளிவேல், அருணாச்சலம், உதவிப்பொறியாளா் இா்வின் ஜெயராஜ், ஜெயகுமாா், சுகாதார அலுவலா் முருகன், இளநிலை உதவியாளா் சண்முகசுந்தரம் மற்றும் ஊழியா்கள் கன்னியாகுமரி தெற்குரத வீதியில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளின் கழிவுநீா் ஓடையின் குழாய்களை உடைத்து ஆய்வு

செய்தனா். அப்போது, விதிமுறைகளை மீறி செயல்பட்ட விடுதிகளின் கழிவுநீா் ஓடையை மூடி சீல் வைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT