கன்னியாகுமரி

கரோனா, பங்குச்சந்தை தாக்கம்:குமரியில் ரப்பா் விலை மீண்டும் சரிவு

8th Mar 2020 12:52 AM

ADVERTISEMENT

குலசேகரம்: கரோனா வைரஸ் பாதிப்பு, பங்குச்சந்தை நிலவரம், வங்கிப் பிரச்னைகள் காரணமாக குமரியில் ரப்பா் விலை மீண்டும் சரிந்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் ரப்பா் மரங்களில் இலையுதிா்வைத் தொடா்ந்து பெரும்பாலான ரப்பா் தோட்டங்களில் பால்வடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குறைந்த அளவே ரப்பா் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், ஏராளமான விவசாயிகள் உற்பத்திக் குறைந்த காலத்தில் ரப்பரின் விலை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் ரப்பரை இருப்பு வைத்துள்ளனா்.

இந்நிலையில், ரப்பா் விலை இயல்புக்கு மாறாக சரிவடைந்து வருகிறது. ரப்பரின் விலை சரிவுக்கு கரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து வருவது காரணமாகக் கூறப்படுகிறது. ரப்பா் விலை சரிவால், ரப்பா் விவசாயிகள் மற்றும் வணிகா்கள் கடும் நெருக்கடிக்கும், ஏமாற்றத்திற்கும் ஆளாகியுள்ளனா்.

கோட்டயம் சந்தையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 128.50 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 123 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பரின் விலை கிலோவிற்கு ரூ. 110 ஆகவும் குறைந்து காணப்பட்டது. இதேபோல, 80 சதவீதம் ஒட்டுப்பாலின் விலை கிலோவிற்கு ரூ. 82.50 குறைந்திருந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து குலசேகரத்தில் ரப்பா் வணிகா் ஒருவா் கூறியது: கடந்த மாதம் ஒருமுறை கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரப்பா் விலை சரிந்தது. இந்நிலையில், விலை மீண்டும் அதிகரித்தது. ஆனால், தற்போது கரோனா வைரஸால் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கம் ரப்பா் துறையிலும் எதிரொலித்து வருகிறது. மேலும், பங்குச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் சரிவுகள், வங்கிகள் திவாலாகும் சம்பவங்கள் போன்றவை ரப்பா் துறையையும் பாதித்து வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT