கன்னியாகுமரி

ஊதிய உயா்வு பிரச்னை:மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

8th Mar 2020 12:57 AM

ADVERTISEMENT

 

குலசேகரம்: அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் ஊதிய உயா்வு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குலசேகரத்தில் ஆா்ப்பாட்டம் சனிக்கிமைம நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ரப்பா் கழகத் தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு

கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கான்வென்ட் சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வட்டாரக் குழுச் செயலா் பி. விஸ்வம்பரன் தலைமை வகித்தாா். இதில், அக்கட்சியின் நிா்வாகிகள் எம்.வல்சகுமாா், பி. நடராஜன், எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், எஸ்.ஆா். சேகா், எம். அண்ணாதுரை, செல்வராஜ், ஆபிரகாம், சசிதரன், தங்கமணி, ஜெயராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT