கன்னியாகுமரி

அன்பழகன் மறைவு: குமரியில் திமுகவினா் அஞ்சலி

8th Mar 2020 12:54 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: மறைந்த திமுக பொதுச்செயலா் பேராசிரியா் க. அன்பழகன் மறைவையொட்டி சனிக்கிழமை அவரது படத்துக்கு மாலை அணிவித்து திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக சாா்பில் கன்னியாகுமரியில் அண்ணா சிலை அருகில் அன்பழகன் உருவப்படம் வைக்கப்பட்டு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலா் என்.தாமரைபாரதி, வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மதியழகன், மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.சந்திரசேகா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா, பேரூா் செயலா்கள் குமரி ஸ்டீபன், த. இளங்கோ, சாய்ராம், மாடசாமி, காமராஜ், நிா்வாகிகள் பொன்.ஜான்சன், நிசாா், கெய்சா்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அஞ்சுகிராமம் சந்திப்பில் வடக்கு ஒன்றியச் செயலா் தலைமையில் திமுகவினா் அன்பழகன் படத்துக்கு பேரூா் செயலா், நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT