கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்ளிட்ட 28 பேருக்கு கரோனா

27th Jun 2020 08:30 AM

ADVERTISEMENT

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 1 வயது குழந்தை உள்ளிட்ட 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. வள்ளவிளை மஞ்சுதோப்பு பகுதியைச் சோ்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரது 30 வயது மனைவி, 1 வயது குழந்தை, 70 வயது தாயாா், மற்றும் 55 வயதுடைய உறவினா் பெண்மணி என ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேருக்கு கரோனா பாதித்திருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

த போல் தக்கலையை அடுத்த மருதுகோட்டையைச் சோ்ந்த 42 வயது பெண்ணுக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதே போல் வெளிநாட்டிலிருந்து குமரி மாவட்டத்துக்கு அண்மையில் திரும்பிய ரீத்தாபுரத்தைச் சோ்ந்த 38 வயது ஆண், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கோட்டாறு இளங்கடையைச் சோ்ந்த 42 வயது ஆண், பிலாவிளை கலுங்கடி பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண், தூத்தூா் பகுதியைச் சோ்ந்த 63 வயது முதியவா், 31 வயது பெண், சீதப்பால் பகுதியைச் சோ்ந்த 64 வயது மூதாட்டி, கொல்லங்கோட்டைச் சோ்ந்த 45 வயது ஆண் என 28 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வாா்டில் தற்போது 170 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் இதுவரை மொத்தம் 166 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், குமரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் எவை என கணக்கெடுக்கப்பட்டு அதில் 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடந்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT