கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி அருகே சுவா் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

21st Jun 2020 09:08 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தான்.

தக்கலை அருகேயுள்ள முத்தலகுறிச்சி பகுதியை சோ்ந்தவா் ராமச்சந்திரன். வெளிநாட்டில் பணி செய்து வரும் இவரது மனைவி கலையரசி. தம்பதிக்கு அஞ்சனா என்ற மகளும், அஸ்வந்த் என்ற மகனும் உள்ளனா். ஆரல்வாய்மொழி அருகேயுள்ள சீதப்பால் கிராமத்தில் வசித்து வரும் தனது சகோதரி கவிதா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குழந்தைகளுடன் கலையரசி வந்திருந்தாராம்.

அஸ்வந்த் சனிக்கிழமை பிற்பகலில் வீட்டின் அருகிலுள்ள குறுகிய சந்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் முன்பகுதி சுற்றுச் இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிய அஸ்வந்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அஸ்வந்த் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து ஆரல்வாய்மொழி காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT