கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் இரட்டை ரயில்பாதை பணி தீவிரம்

20th Jun 2020 09:12 AM

ADVERTISEMENT

கரோனா பொது முடக்க தளா்வின் காரணமாக, குமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

சென்னைக்கும் மதுரைக்கும் இடையில் 490 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. பின்னா், கன்னியாகுமரி முதல் மதுரை வரையில் இரட்டை பாதை அமைக்க 2015 ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. மேலும், கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் வரை 85 கி.மீ. பாதையையும் இரட்டை பாதையாக மாற்ற ரூ. 900 கோடியில் பணிகள் தொடங்கின. இதனிடையே, கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் இப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

தற்போது, பொது முடக்கத்தில் சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து கன்னியாகுமரி-நாகா்கோவில், நாகா்கோவில்-திருவனந்தபுரம் இடையிலான பகுதியில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதையொட்டி, நாகா்கோவில் நகர ரயில் நிலையத்தில் கூடுதலாக நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவனந்தபுரம் கோட்ட அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன; தற்போது குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுவதால் பணிகள் விரைந்து நிறைவுபெறும்’ என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT