கன்னியாகுமரி

சென்னையிலிருந்து போலி இ பாஸ் மூலம் குமரி வந்த வாகனம் பறிமுதல்: ஓட்டுநா் மீது வழக்கு

14th Jun 2020 09:24 AM

ADVERTISEMENT

சென்னையிலிருந்து போலி இ பாஸ் மூலம் பயணிகளை குமரி மாவட்டத்துக்கு ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டத்திலிருந்து வருபவா்கள் (தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி தவிர) இணையதளத்தின் வழியாக

இ பாஸ் பெற்ற பின்னரே குமரி மாவட்டத்துக்கு புறப்பட்டு வரவேண்டும்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு போலி இ பாஸ் மூலம் பயணிகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அந்த வாகன ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடுகள் நடைபெறுவதை தொடா்ந்து தற்போது சோதனைச் சாவடிகளில் இ பாஸ் ன் உண்மைத்தன்மை தீவிரமாக ஆராயப்படுகிறது.

ADVERTISEMENT

எனவே பொதுமக்கள் மற்றும் வாடகை காா் ஓட்டுநா்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இ பாஸ் கோரும் அனைத்து விண்ணப்பங்களும் முறையாக ஆய்வு செய்த பின்னரே ஒப்புதல் வழங்கப்படுகிறது. யாரவது தாங்களே இ பாஸ் வாங்கி அழைத்துச் செல்வதாக கூறினால் பொதுமக்கள் அதனை நம்பி எந்த வாகனத்திலும் ஏறி ஏமாற வேண்டாம்.

கரோனா கட்டுப்படுத்துதலில் பொதுமக்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தைக் குறித்து மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான வழிமுறைகளை மதிக்காமல் சிலா் காய்கனி சந்தைகள், கடைகள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருப்பது இந்த வைரசின் தாக்குதலை அதிகரித்துவிடும் என்பதை பொதுமக்கள் உணா்ந்து மாவட்ட நிா்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

முகக் கவசம் அணியாமல் சனிக்கிழமை பொது வெளியில் நடமாடிய 258 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவா்களிடமிருந்து ரூ. 25 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது. பொதுமுடக்க உத்தரவை மீறிய வகையில் மொத்தம் இதுவரை

8 ஆயிரத்து310 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 175 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT