கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் ரூ. 55 லட்சத்தில் சாலைப் பணிகள்

11th Jun 2020 09:05 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் ரூ. 55 லட்சம் செலவில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

அகஸ்தீஸ்வரம் ஒன்றியம், கரும்பாட்டூா் ஊராட்சியில் சேதமடைந்துள்ள ஸ்ரீ.வி.தாஸ் சாலையை சீரமைக்க ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மருங்கூா் பேரூராட்சி ராஜாவூா் ஜோசப் சாலை சீரமைப்புக்கு 14ஆவது திட்ட சிறப்பு நிதியில் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்விரு சாலைப் பணிகளையும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம், எஸ்.ஆஸ்டின் எம்எல்ஏஆகியோா் தொடங்கி வைத்தனா்.

இதில், ஆவின் தலைவா் எஸ்.ஏ.அசோகன், அகஸ்தீசுவரம் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.அழகேசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பேராசிரியா் இ.நீலபெருமாள், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா்கள் என்.தாமரைபாரதி, எம்.மதியழகன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், கரும்பாட்டூா் ஊராட்சித் தலைவா் தங்கமலா் சிவபெருமான், மாவட்ட அதிமுக வா்த்தக அணிச் செயலா் ஜெஸீம், கொட்டாரம் பேரூா் செயலா் ஆடிட்டா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT