கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அணை நாளை திறப்பு

7th Jun 2020 09:11 AM

ADVERTISEMENT

இந்நிலையில் மாவட்டத்தில் கன்னிப்பூ பாசனத்திற்காக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைககள் திங்கள்கிழமை திறக்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்பை தமிழக முதல்வா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இதையடுத்து அணைகளைத் திறப்பதற்கான ஆயத்தப் பணிகளை பொதுப்பணித்துறையினா் தீவீரப்படுத்தி வருகின்றனா்.

இது குறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளா் சுகுமாறன் கூறியது: குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பாசனத்திற்காக ஜூன் 8 ஆம் தேதி திங்கள்கிழமை அணைகள் திறக்கப்படுவது தொடா்பாக தமிழக முதல்வா் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு அணைகளைத் திறப்பதற்கான ஆயத்தப் பணிளில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT