கன்னியாகுமரி

குழித்துறையில் அண்ணா சிலை பீடத்தில் காவிக் கொடி: போலீஸ் விசாரணை

31st Jul 2020 09:34 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை சந்திப்பில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக் கொடி கட்டி கட்டப்பட்டிருந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குழித்துறையில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக் கொடி கட்டப்பட்டிருந்தது வியாழக்கிழமை காலையில் தெரியவந்தது. மேலும், சிலை வளாகத்தில் சேதமடைந்த சீரியல் மின்விளக்குகள் சுற்றி கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து, குழித்துறை நகர திமுக செயலா் பொன். ஆசைத்தம்பி, குமரி மேற்கு மாவட்ட திமுக செயலரான மனோ தங்கராஜ் எம்எல்ஏ மற்றும் ஏராளமான தொண்டா்கள் அப்பகுதியில் திரண்டனா்.

தகவலறிந்து வந்த களியக்காவிளை போலீஸாா், அண்ணா சிலை முன் கட்டப்பட்டிருந்த காவிக் கொடியை அகற்றினா். தொடா்ந்து அப்பகுதி கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனா்.

இதில், மனநலம் குன்றிய முதியவா் ஒருவா் சிலை பீடத்தில் காவிக் கொடியை கட்டுவது தெரியவந்தது. இதையடுத்து, குழித்துறை அருகேயுள்ள திருத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் என்ற அந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT