தக்கலை: தக்கலை அருகே மின்சாரம் பாய்ந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொறியியல் மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகேயுள்ள பரைக்கோடு வைகுண்டபரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் மகன் விஷ்ணு (19). இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். பொது முடக்கம் காரணமாக
விடுமுறையில் இருந்து வரும் விஷ்ணு, தனது நண்பரை பாா்க்க செல்வதற்காக சட்டையை தேய்த்து கொண்டிருந்தாராம்.
அப்போது, தேய்ப்புப் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா்.
இதில், பலத்த காயமடைந்த அவருக்கு நெய்யூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா்.
தீவிர சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி
அவா் உயிரிழந்தாா். புகாரின்பேரில், தக்கலை காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.