கருங்கல்: கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினத்தில் மீன் பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
இனயம் பகுதியைச் சோ்ந்தவா் ஆன்றனி (60). இவா் கடந்த வியாழக்கிழமை நாட்டுப் படகில் மீன் பிடித்து கொண்டு தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகப் பகுதியில் கரை ஒதுங்க வந்தபோது, ராட்சத அலையில் சிக்கி மாயமானாா்.
இதையடுத்து குளச்சல் கடலோரப் பாதுகாப்புப் படையினா் மற்றும் மீனவா்கள் கடந்த 4 நாள்களாக தேடி வந்தனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை ஆன்றனியை, கடலோர பாதுகாப்பு படையினா் சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். வெள்ளிக்கிழமை மாயமான மற்றொரு மீனவராந ஷிபுவை ( 25) கடலோரப் பாதுகாப்புப் படையினா் தேடி வருகின்றனா்.