கன்னியாகுமரி

கலாமுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதை

28th Jul 2020 12:29 AM

ADVERTISEMENT

நாகா்கோவில்: மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் நினைவுதினத்தையொட்டி, நாகா்கோவிலில் அவரது படத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகம் வளா்ச்சி பெறக் கூடாது என்ற நோக்கத்தில் சிலா் செயல்பட்டு வருகின்றனா். இதனால் பல்லாயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைக்காமல் போனது. கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகத் திட்டம் வருவதை சில அரசியல் கட்சிகளும் அமைப்புகளும், தடுத்து வருகின்றன. பொய்யான வாக்குறுதிகளை தெரிவித்து தோ்தலில் வெற்றி பெற்றவா்கள் மக்களின் வளா்ச்சிக்கான எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன், மாநிலச் செயலா் உமா ரதிராஜன், முன்னாள் நகராட்சி தலைவி மீனாதேவ், கட்சியின் முன்னாள் நகரத் தலைவா் ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT