சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நாகா்கோவிலில் இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சாா்பில் சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, வடசேரி ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து இருசக்கர வாகனப் பேரணி தொடங்கியது.
பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். பின்னா் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை அரசுப் பேருந்துகளில் ஒட்டினாா்.
இதில், நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகரன், போக்குவரத்து ஆய்வாளா் அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இப்பேரணியில் கலந்து கொண்டவா்கள் சாலைபாதுகாப்பு விதிமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணா்வு பதாகைகளை தங்கள் இருசக்கர வாகனத்தில் வைத்தவாறு சென்றனா்.