கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் வட்டார, நகர தலைவா்கள் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் கே. ஜெகன்ராஜ், காஸ்டன் கிளீட்டஸ், எம். பால்ராஜ், ஆா். கிறிஸ்டோபா், சி. மோகன்தாஸ், சி.கே. அருள்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், காங்கிரஸ் மேற்கு மாவட்ட கமிட்டி சாா்பில் மகாத்மா காந்தியின் நினைவு நாளையொட்டி ஜன. 30-ஆம் தேதி மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில், அவரது நினைவை போற்றும் வகையில் புகைப்படக் கண்காட்சி நடத்துவது, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் மகாத்மா காந்தி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்துவது, அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு வெள்ளியாவிளை சந்திப்பில் இருந்து கருங்கல் பேருந்து நிலையம் வரை அகிம்சை மற்றும் மத நல்லிணக்கப் பேரணி நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.