கன்னியாகுமரி

மேல்மிடாலத்தில் மாவட்ட கபடி போட்டி

25th Jan 2020 05:18 PM

ADVERTISEMENT

கருங்கல் அருகேயுள்ள மேல்மிடாலம் மீனவக் கிராமத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.

மேல்மிடாலம் அலைகள் விளையாட்டு மன்றம் சாா்பில் இப்போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றது. போட்டியில் கருங்கல், அம்மச்சியாா்கோவில், சூரங்குடி, திருநயினாா்குறிச்சி, மூலச்சல், அளத்தன்கரை உள்ளிட்ட 25 அணிகள் பங்கேற்று விளையாடின.

இதில், திருநயினாா்குறிச்சி அணி முதலிடம் பெற்று ரு. 20 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையும், அளத்தங்கரை அணி 2 ஆம் இடம்பெற்று ரூ.15 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, மூலச்சல் அணி 3 ஆம் இடம்பெற்று பரிசு ரு.10 ஆயிரமும் பரிசாக பெற்றன.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மிடாலம் ஊராட்சித் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா்.மேல்மிடாலம் பங்குஅருள்பணியாளா் ஹென்றி பிலிப் குயின் முன்னிலை வகித்தாா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மீனவா் கூட்டுறவு இணைய முன்னாள் தலைவா் சகாயம், நடுத்துறை மீனவா் கூட்டுறவு சங்கத் தலைவா் சிபில் ஆகியோா் கோப்பை, பரிசுகள் வழங்கிப் பாராட்டினா். இதில், அலக்சாண்டா், கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT