கன்னியாகுமரி

பளுகல் பள்ளியில் மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி முகாம்

25th Jan 2020 08:07 AM

ADVERTISEMENT

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் நடைபெற்ற இம் முகாமுக்கு தலைமையாசிரியை கிறிஸ்டல் ஜாய்லெட் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் மதுசூதனன் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் ஷிபு வரவேற்றாா். மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் சுந்தர ரமணி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மேல்புறம் ஒன்றியத் தலைவா் முருகன், துணைத் தலைவா் பிரீத்தி, ஆசிரியா்கள் ஷாரோன், சோபியா, அலோசியஸ் உள்ளிட்டோா்

பேசினா். இதில் 11 பள்ளிகளைச் சோ்ந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT