கன்னியாகுமரி

திங்கள்நகரில் அங்கன்வாடி மையம் திறப்பு

25th Jan 2020 05:16 PM

ADVERTISEMENT

திங்கள்நகரில் ரூ. 6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திங்கள்நகா் பேருந்து நிலையம் அருகில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் தலைவா்கள் பீட்டா்தாஸ் (திங்கள்நகா்), மனோகா்சிங் ( கல்லுகூட்டம்), ஜெரால்டு கென்னடி ( கக்கோட்டுதலை), மாநில பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம். யூசுப்கான், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் எனல்ராஜ், நிா்வாகிகள் புலவா் செல்லப்பா, ஆன்றோ அலெக்ஸ், சுந்தர்ராஜ், முருகன், ஹென்றி,

கிருஷ்ணமூா்த்தி, மூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT