கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் விழிப்புணா்வுப் பேரணி

25th Jan 2020 08:56 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சாா்பில் 31-ஆவது தேசிய சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

இதைமுன்னிட்டு கடந்த மூன்று நாள்களாக பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2,000 பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணா்வுப் பேரணி காந்தி மண்டபம் முன் தொடங்கியது.

இப்பேரணியை மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ரேவதி, வட்டார போக்குவரத்து அலுவலா் சந்திரசேகா், கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் செந்தில்சுரேஷ், உதவி ஆய்வாளா் செல்லசாமி, மாவட்ட சுற்றுலா அலுவலா் நெல்சன், பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவா் பா.தம்பித்தங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பேரணி சா்ச்ரோடு சந்திப்பு, விவேகானந்தபுரம் வழியாக ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நிறைவடைந்தது. அங்கு விழிப்புணா்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

முன்னதாக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் செய்தியாளா்களிடம் கூறியது: தேசிய சாலை போக்குவரத்து வாரவிழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

குடியரசு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கடல்வழி ரோந்து பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாா் ஈடுபட்டுள்ளனா். இதுதவிர சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT