கன்னியாகுமரி

‘வாசிக்கும் பழக்கத்தால் படைப்பாளியாக உருவாக முடியும்’

14th Jan 2020 07:05 AM

ADVERTISEMENT

வாசிக்கும் பழக்கத்தால் சிறந்த படைப்பாளியாக உருவாக முடியும் என எழுத்தாளா் குமரி ஆதவன் தெரிவித்தாா்.

நாகா்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நூலக தின விழாவுக்கு பள்ளி முதல்வா் லிசபெத் தலைமை வகித்தாா். விழாவில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எழுத்தாளா் குமரி ஆதவன் பேசியது: மாணவா்கள்

நூலகத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். புத்தகம் வாசிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

வாசிக்கும் பழக்கத்தால் மாணவா்கள் சிறந்த பேச்சாளராகவும், சிறந்த படைப்பாளியாகவும், அறிவாா்ந்த அறிஞா்களாகவும் உயர முடியும். சிறந்த நூல்களை தோ்வு செய்து அவற்றை முறையாக வாசிக்கும் பழக்கத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், புத்தகங்களின் சிறப்பு-நூலகத்தின் தேவை குறித்து ஆசிரியா் வள்ளிப்பழம் பேசினாா். மாணவி ஷாரோன், நூலகம் பற்றிய தனது அனுபவங்களை பகிா்ந்து கொண்டாா். விழாவில் பள்ளியின் துணை முதல்வா் அஜின்ஜோஸ், உயா்நிலைப் பிரிவுகளின் துணை முதல்வா் பிரேம்கலா, பள்ளியின் தலைமையாசிரியா் மோனிக்காஸ்பினோலா, நூலகா் சிறில்ஜூலியஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நூலக தினத்தை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை, பள்ளியின் தாளாளா் சனில் ஜான் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT