கன்னியாகுமரி

கல்குறிச்சி புனித ஜோசப் பள்ளியில் பொங்கல் விழா

14th Jan 2020 05:05 PM

ADVERTISEMENT

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழா தொடக்கமாக பள்ளித் தலைமை ஆசிரியா் கனகராஜ் தேசியக் கொடி ஏற்றினாா். தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் பெரிங்டன் தலைமை வகித்துப் பேசினாா்.

தொடா்ந்து மாணவா், மாணவிகளிடையே கோலப் போட்டி நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து ஆசிரியா்களும், மாணவா்களும் இணைந்து சமுத்துவ பொங்கலிட்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சிகளை உடற்கல்வி ஆசிரியை வேபின் விஜிலா, பட்டதாரி ஆசிரியைகள் ரெக்சிலின், ரெஜின் மேரி, லில்லி மேரி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். ரோஜிலின் விஜயா நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT