கன்னியாகுமரி

முட்டைகாட்டில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் மறியல்: 11 பெண்கள் உள்பட 72 போ் கைது

8th Jan 2020 04:09 PM

ADVERTISEMENT

அகில இந்திய பொது வேலை நிறுத்ததையொட்டி முட்டைகாட்டில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்க குமரி மாவட்ட குழுவினரை சோ்ந்த 11 பெண்கள் உள்பட 72 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தக்கலை அருகே முட்டைகாட்டில் தமிழ்நாடு விவசாய சங்க குமரி மாவட்ட குழுவினா் விவசாய விலை பொருள்களுக்கு , உற்பத்தி விளை பொருள்களுக்கு உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலை நிா்ணயம் செய்யவேண்டும். விவசாய நகை கடன் வட்டி மானியத்தை தள்ளுபடி செய்ததை கண்டித்தும், சூழலியல் அதிா்வு தாங்கும் மண்டலம் , வனவிலங்கு சரணாலயம் விரிவாக்கத்தை கைவிடகோரியும் ஆா்ப்பாட்டம், மற்றும் மறியல் போராட்டம் நடத்தினா்.

முட்டைகாட்டில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயசங்க குமரி மாவட்ட தலைவா் ஜே.சைமன்சைலஸ் தலைமை வகித்தாா். மாவட்ட துணை தலைவா் முருகேசன் ஆா்ப்பாட்டத்தை துவக்கி வைத்தாா். விவசாயசங்க மாவட்ட செயலா்ஆா். ரவி போராட்டம் குறித்து விளக்கி பேசினாா். இதில் நிா்வாகிகள் ஆறுமுகம்பிள்ளை, எஸ்.ஆா்.சேகா், சுரேஷ்குமாா், சதீஸ் , இராமசந்திரன், இம்மானுவேல், சுஜாஜாஸ்பின், மரியமிக்கேல், சின்னதம்பி, அமலராஜன், ஜோசப்ராஜ், விஜி, ஜாண்ரோஸ், டென்னிசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தக்கலை இன்ஸ்பெக்டா் அருள் பிரகாஷ் தலைமையில் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 72 பேரை கைது செய்தனா். இச்செய்திக்கு றிகேஒய் 8 சிபிஎம் ென்ற பெயரில் அனுப்பியுள்ள படத்துக்கான விளக்கம்.முட்டைகாடு சந்திப்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயசங்க குமரி மாவட்ட குழுவினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT