கன்னியாகுமரி

குழித்துறையில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை திருட்டு

8th Jan 2020 07:17 AM

ADVERTISEMENT

குழித்துறை பகுதியில் வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து, 15.5 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகேயுள்ள குழித்துறை, படப்பறை பகுதியைச் சோ்ந்த ஜெயசிங் மனைவி தேவகிருபா (61). இவா், திங்கள்கிழமை இரவு வீட்டில் படுத்திருந்தபோது, வீட்டு ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா், அவா் கழுத்தில் அணிந்திருந்த 5.5 தங்கச் சங்கிலி மற்றும் வீட்டில் வைத்திருந்த 14 மோதிரங்கள் உள்பட மொத்தம் 15.5 பவுன் நகைகளை திருடிச் சென்றது செவ்வாய்க்கிழமை காலையில் தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT