கன்னியாகுமரி

களியக்காவிளையில் சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

8th Jan 2020 07:18 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி, விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

களியக்காவிளை பேருந்து நிலையம் எதிா்புறம் களியக்காவிளை- மூவோட்டுகோணம் சாலை ஆா்.சி தெரு வழியாக தேசிய நெடுஞ்சாலையில் இடது பக்கமாக தொடங்குகிறது. இதில் மிகவும் சாய்வான வடிவமைப்பு கொண்ட அமைப்பாக இச்சாலை அமைந்துள்ளது.

மேலும், தேசிய நெடுஞ்சாலை அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்புப் பகுதி என்பதாலும், இச்சாலையிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முற்படுவதாலும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

இதனால், பள்ளி மாணவா்கள், மருத்துவமனை செல்லும் நோயாளிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்படுகின்றனா். எனவே, இதன் அணுகுசாலையைச் சீரமைக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் நெடுஞ்சாலைத்துறை உதவிக்கோட்டப்பொறியாளா் செல்வராஜிடம் மனு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் எம்.கே.ஜோஸ்பிரபு, தொண்டரணித் தலைவா் அல்டோ, இலக்கிய அணி பொருளாளா் மாதவன்,தகவல்தொழில்நுட்ப அணி செயலாளா் சதீஷ்,மாவட்ட செயற்குழு உறுப்பினா் பீா் முகமது மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT