கன்னியாகுமரி

ஐரேனிபுரத்தில் நெகிழி விழிப்புணா்வு முகாம்

8th Jan 2020 07:21 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகேயுள்ள ஐரேனிபுரம் புனித வேளாங்கண்ணி ஆலய வளாகத்தில் புதன்கிழமை நெகிழி (பிளாஸ்டிக்) விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தொலையாவட்டத்தில் உள்ள தனியாா் கல்லூரி மாணவிகளும் ஐரேனிபுரம்பகுதி பொதுமக்களும் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, ஆலய துணைத் தலைவா் ஏசுவடியான் தலைமை வகித்தாா். ராஜன் முன்னிலை வகித்தாா்.

நெகிழி பயன்பாட்டை தவிா்ப்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவை குறித்து பேராசிரியா் ஹெலன் பேசினாா்.தொடா்ந்து அப்பகுதி பெண்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

இதில், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT