கன்னியாகுமரி

ஆங்கில கவிதைப் போட்டி: குமரி மாணவி சிறப்பிடம்

8th Jan 2020 07:20 AM

ADVERTISEMENT

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆங்கில கவிதைப் போட்டியில், கன்னியாகுமரி பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

தேசிய அளவில் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்ட ஆங்கில கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டி, கதைப் போட்டி ஆகியவை ஹைதராபாத் நகரில் அண்மையில் நடைபெற்றன. கன்னியாகுமரியை அடுத்த பொற்றையடி சியோன்தோட்டத்தில் அமைந்துள்ள ஆரோக்கிய அன்னை பள்ளியின் 6ஆம் வகுப்பு மாணவி ஒய்.எஸ்.ஜொபைனா அஸ்லின், ஆங்கில கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றாா்.

இம்மாணவியை பள்ளித் தாளாளா் டி.மரியவிக்டா், முதல்வா் ஆல்ரின் விக்டா், பள்ளி இயக்குநா் ஜே.புஷ்பம் ஆகியோா் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT