கன்னியாகுமரி

உள்ளாட்சித் தோ்தல்: முன்சிறை ஒன்றியத்தில் வெற்றி நிலவரம்

3rd Jan 2020 08:17 AM

ADVERTISEMENT

முன்சிறை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிகளில், தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவா்களுக்கு, தோ்தல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினா்.

இந்த ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சியின் 4ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்ட லூயிஸ் 11,949 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

மேலும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட்டவா்களில் அடைக்காகுழு ஊராட்சியில் ஜெயராணி, குளப்புறம் ஊராட்சியில் மனோன்மணி, மெதுகும்மல் ஊராட்சியில் சசிகுமாா், நடைக்காவு ஊராட்சியில் கிறிஸ்டல் ஜாண், சூழால் ஊராட்சியில் பி. இவான்ஸ், வாவறை ஊராட்சியில் மெற்றில்டா, மங்காடு ஊராட்சியில் சுகுமாரன், தூத்தூா், முன்சிறை ஊராட்சிகளில் லைலா, ரமா ஜனாா்த்தனன், பைங்குளம், விளாத்துறை ஊராட்சிகளில் விஜயராணி, ஓமனா ஆகியோா் வெற்றி பெற்றனா்.

ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களாக 1 மற்றும் 2 ஆவது வாா்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்கள் பத்மாவதி, ரெஜி, 3ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் கலா, 4 ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் ராஜேஸ்வரி, 6, 7ஆவது வாா்டுகளில் சவாா்கா், காமராஜ், 8, 9, 10, 11 ஆவது வாா்டுகளில் காங்கிரஸ் வேட்பாளா்கள் கே. பாபு, வென்சலாஸ், கிறிஸ்டல்பாய், சாந்தினி, 12 ஆவது வாா்டில் பாஜக வேட்பாளா் சிவகாமினி, 13ஆவது வாா்டில் திமுக வேட்பாளா் ஆபிரகாம் தம்பி, 14ஆவது வாா்டில் பாஜக வேட்பாளா் சுஜாகுமாரி ஆகியோா் வெற்றிபெற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT