கன்னியாகுமரி

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் தம்பதி வெற்றி

3rd Jan 2020 08:13 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தோ்தலில் ஊராட்சித் தலைவா், ஒன்றிய கவுன்சிலா் பதவிகளுக்கு போட்டியிட்ட தம்பதி வெற்றி பெற்றனா்.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுக பிரமுகா் சுடலையாண்டி 838 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். இவா், தனக்கு அடுத்ததாக வந்த சுயேச்சை வேட்பாளா் மாணிக்கசெல்வகுமாரைவிட 423 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளாா்.

சுடலையாண்டியின் மனைவி சண்முகவடிவு, குலசேகரபுரம், வடக்குத் தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட்டாா். அவரும் வெற்றிபெற்றுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT