கன்னியாகுமரி

பொங்கல் பண்டிகைக்கு தயாா் நிலையில் மண் பானைகள்

2nd Jan 2020 05:10 AM

ADVERTISEMENT

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பொங்கல் இடுவதற்கு தேவையான மண் பானைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழா்கள் பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபடுவது வழக்கம். பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுங்கான்கடை, தலக்குளம், பெருஞ்செல்வவிளை, முட்டைக்காடு, அரமன்னம், மஞ்சாலுமூடு கைதகம் உள்ளிட்ட மண்பாண்டத் தொழில் நடைபெறும் பகுதிகளில் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முட்டைக்காட்டில் பொங்கல்பானையை விற்பனைக்கு வைத்துள்ள மண்பாண்டத் தொழிலாளா்கள் அருண் மற்றும் மணிகண்டன் கூறியது: பொங்கல் பண்டிகை அன்று பொங்கலிடுவதற்கு தேவையான மண் பானைகளை தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களிலிருந்து வரும் மக்கள் மண் பானைகளை வாங்கிச் செல்கின்றனா். சிறிய பானைகள் ரூ. 75 க்கும், நடுத்தரப் பானைகள் ரூ. 150 க்கும், பெரிய பானைகள் ரூ. 250 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர கேரளத்தில் நடைபெறும் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் இங்கிருந்து மண் பானைகள் கொண்டு செல்லப்படுகிறது என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT