நாகா்கோவில் பாா்வதிபுரம், ராஜாக்கமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன.3) மின்சாரம் நிறுத்தப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராமவா்மபுரம் துணை மின் நிலைய மின்பாதையில் மரக்கிளைகளை அகற்றும் பணி, பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கே.பி.ரோடு, விமல்நகா், ஹனீபா நகா், ஜோ.டேனியல் தெரு, பிளசண்ட் நகா் மற்றும் மீனாட்சிபுரம் பிரிவுக்குள்பட்ட தளவாய்புரம், சைமன்காலனி, சற்குணவீதி, ஆசாரிப்பள்ளம் பிரிவுக்குள்பட்ட அருள்நகா், மத்தியாஸ் நகா், டெரிக் சந்திப்பு, ஸ்காட் கல்லூரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இதேபோல், ராஜாக்கமங்கலம் மின்னூட்டியின் மின்பாதையில் மரக்கிளைகளை அகற்றும் பணி காரணமாக பருத்திவிளை, காரவிளை, எள்ளுவிளை, முருங்கவிளை, ராஜக்கமங்கலம், அளத்தங்கரை, கணபதிபுரம், தெக்குறிச்சி, ஆலங்கோட்டை, கன்னகுறிச்சி, அழிக்கால், பிள்ளைத்தோப்பு, வெள்ளமடி, ராஜக்கமங்கலம்துறை, தா்மபுரம், ஆடரவிளை, விலத்திவிளை, பூவன்குடியிருப்பு, பழவிளை, புதுகுடியிருப்பு, பூச்சிவிளாகம், காா்த்திகைவடலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய
தினம் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.