கன்னியாகுமரி மாவட்ட சிஐடியூ சாா்பில் தோழமை குடும்ப சங்கமம் புத்தாண்டு நிகழ்ச்சி நாகா்கோவிலில் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணன்கோவில் பரதா் தெருவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளா் சங்க மாவட்ட துணைத்தலைவா் ஜெயம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சிஐடியூ நிா்வாகி சுகுமாரன் புத்தாண்டு கேக் வெட்டினாா். விஸ்வகா்மா சமுதாயத் தலைவா் டி.கிருஷ்ணன், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில பொதுச்செயலா் எஸ். அந்தோணி, பேராசிரியா் எம்.தாமஸ், அன்பிய ஒருங்கிணைப்பாளா் ஆன்றனி, மீனாட்சிசுந்தரம், எம்.மணி, மாதவன் பிள்ளை, ராஜகோபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.