கருங்கல் அருகேயுள்ள திக்கணங்கோடு சந்திப்பில் கழிவுகளால் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இறைச்சிகழிவுள்,ஹோட்டல் கழிவுகள், குப்பைகளால் முக்கிய சந்திப்புகளில் சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து வருகின்றன. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்என பிரித்து அவற்றை அகற்ற துப்புரவு பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்காக குப்பைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது. எனினும், தக்கலை ஒன்றியம், திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் திக்கணங்கோடு சந்திப்பில் ராஜீவ்காந்தி சிலை அருகில் மழைநீா் வடிகாலில் ஹோட்டல் கழிவுகள் கொட்டப்படுகின்றன.
குப்பைகள், கழிவுகள் தேங்கி அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் மற்றும்
வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக புகாா் கூறப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.