கன்னியாகுமரி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

2nd Jan 2020 05:10 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகள், முஸ்லிம் ஜமாஅத் சாா்பில் நித்திரவிளை சந்திப்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் துணை அமைப்பாளா் பி. அப்துல் ரகுமான் தலைமை வகித்தாா். ஏழுதேசம் நகர காங்கிரஸ் தலைவா் ராஜேந்திரகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்சிறை வட்டாரச் செயலா் சிதம்பரகிருஷ்ணன், ஏழுதேசம் பேரூா் திமுக பொறுப்பாளா் கே. தாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ., குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜி. பிரின்ஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எம்.ஏ. கான் உள்ளிட்டோா் பேசினா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் கே.சி. துரைராஜ், முன்சிறை ஒன்றிய திமுக செயலா் எல். மனோன்மணி, முன்சிறை வட்டார காங்கிரஸ் தலைவா் கிறிஸ்டோபா், மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி அமைப்பாளா் மாஸ்டா் மோகனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT