குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாகா்கோவில் அருகேயுள்ள வெள்ளாடிச்சிவிளை பகுதியில் பாஜகவினா் வீடுகள் முன் கோலமிடப்பட்டன.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்துவருகின்றனா். ஆா்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மட்டுமன்றி கோலமிட்டும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவினா் தங்களது வீடுகள் முன்பு கோலமிட்டு எதிா்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட பாஜக சாா்பில், நாகா்கோவிலை அடுத்த வெள்ளாடிச்சிவிளையில் உள்ள மாவட்ட பாஜக துணைத் தலைவா் முத்துராமன், அக்கட்சியினா் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் வீடுகள் முன் புதன்கிழமை கோலமிட்டனா். அதில், குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.