திருவட்டாறில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் (2020) பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி, புகைப்படம் திருத்தங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றுக்கான சிறப்பு முகாம் ஜன. 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் பத்மநாபபுரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 95 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முகாம் நாள்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து பத்மநாபபுரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
பயிற்சி முகாமில், திருவட்டாறு வட்டாட்சியா் ப. சுப்பிரமணியன், தோ்தல் துணை வட்டாட்சியா் மாத்யூ ஜெய ஜோஸ், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மரகதவல்லி, முகமது ரியாஸ், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பங்கேற்றனா்.